Showing posts with label நான் ரசித்த கவிதைகள். Show all posts
Showing posts with label நான் ரசித்த கவிதைகள். Show all posts

Monday, March 30, 2009

ஆசைக்கு எல்லை?



எல்லோர்க்கும் ஆசை
பணக்காரர்களாக ஆக.

பணக்காரர்களுக்குக் கூட

(கவிஞர் இஜட் ஜபருல்லா சொல்லக் கேட்டது)

நீதி தேவதை


ஏ நீதி தேவதையே!
முதலில் உன் வாள்
உன் கண்கட்டை அவிழ்க்கட்டும்!!
கண்களைத் திறந்து பார்
உன் தராசுத் தட்டுகளில்
புறாவின் மாமிசத்தை
சிபிகள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள்
- மு.மேத்தா

முத்தம்


பேச்சுக்கு எதிராக
காதற்சபையில் நிறைவேறும்
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
- மு.மேத்தா

எது விதி?



முடிக்கத் தெரியாத
சிறுகதையை
குறுநாவல் என்று
கூப்பிட்ட மாதிரி

தீர்க்க முடியாத பிரச்சினைக்கு
விதி என்று பெயரிட்டு
விலகி விடுவதா..?
மு.மேத்தா

வாயில்லாச் சில்லறைகள்
சப்தமிடும்

வாய்திறந்தும் பேசாத
சுருக்குப்பை

- மு.மேத்தா

விலைமாது



இரைப்பை நிரப்ப
கருப்பையை
பட்டினியிடும் மாதர்
மு.மேத்தா

முதுமை



இறந்த காலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு
காலத்தின் குறும்பால்
'கார்ட்டூன்' ஆன
வர்ண ஓவியம்

நரை..
இந்த நரை
வெற்றிலை போட்ட அனுபவங்கள்
தடவி விட்டுச் சென்ற
சுண்ணாம்பு

இது..
மூச்சுக்குதிரை
ஓடிக் களைத்துத்
தள்ளிய நுரை

இந்த சுருக்கங்கள் ..
இது உயிர் எழுதிக் கொண்டிருக்கும்
ராஜினாமாக் கடிதம்
மறுப்பது போல் தலையாட்டும்
வாழ்வையா..?
மரணத்தையா..?

மு.மேத்தா

Monday, January 26, 2009

தமிழன்பனின் வரிகளிலிருந்து :



பத்தாவது முறையும்
தடுக்கி விழுந்தவனை
பூமித்தாய்
தொட்டு முத்தமிட்டாள் -
அவன்,
ஒன்பது முறை
எழுந்து நிற்க
முயன்றமைக்காக

* * *

மாங்கல்ய மகிமையை
மனைவி அறிவாள்
மணாளன் அறிவான்
அவர்கள் இருவரையும் விட
மார்வாடியே
அதிகமாய் அறிவான்

* * *
பனித்துளியில்
மூழ்கிப் போகும்
பயம் உள்ளவனுக்கு
கப்பல் செய்யக்
கற்றுக் கொடுப்பதால்
என்ன பயன்?

* * *
முள்ளைப் பாட மறந்து
ரோஜாவைப் பாடினேன்
இரவு தூங்க முடியவில்லை
ஒரே குத்தல்கள்

* * *

எங்கள் ஊரில் ஒருவர்
ஊராட்சி உறுப்பினரானார்
ஒன்றியத் தலைவரானார்
சட்டமன்ற உறுப்பினரானார்
அமைச்சரானார்
ஒருமுறை கூட
மனிதராகாமலே
மரணமானார்

* * *
கவிஞர் ஈரோடு தமிழன்பன்



Friday, March 28, 2008




மர நிழலில் ஒதுங்கினேன்

மர அசைவில்

நேற்று சேகரித்ததிலிருந்து

எனக்கு மட்டும் மழை


- ஜெஸிலா



உன் நகங்கள்
ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டிருந்தன .
நீ பிறந்தவேளையில்
ஒரு மெல்லிய பூவிதழ்போல்
அவை இருந்திருக்கக்கூடும் !

எம். ரிஷான் ஷெரீப்



வீட்டைச்சுற்றி
தோட்டம் போட்டேன்
தோட்டம் சுற்றி
வேலி போட்டேன்
வேலி சுற்றி
காவல் போட்டேன்
காவலைப்பற்றி
கவலைப்பட்டேன்.

- ஷண்முக சுப்பையா
அன்பு என்னும் தலைப்பில்
மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்
அம்மா என்று சொன்னேன்
கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னமும் சிறியதாக சொல்லியிருப்பேன்
நீ என்று.

-தாஜ்
--------------------------------
எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"

- தபூ சங்கர்
--------------------------------
விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"

- இரா. பார்த்திபன்

--------------------------------
ஆயத்தங்களில்
கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்.."

-பசுவய்யா (சு.ரா)
--------------------------------

வலியின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசம்பலை

- மகுடேசுவரன்
- நன்றி : ஆனந்த விகடன் (2002)

--------------------------------
இமாலய முன்னேற்றம்
இந்தியா முழக்கம்

இரும்புக் கம்பியால்
குரும்பு வடிவில்
ஒரு கூண்டு

என் வீட்டு வாசலில்
ஜீரோ வால்ட் பல்புக்கு.

- அப்துல் கையூம்
--------------------------------
ஊரெங்கும் வெள்ளம்
மூச்சு விடும்
ஆற்று மணல்கள்....

- முத்துக் குமரன்